உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கோவில் முன் மண்டபம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு

கோவில் முன் மண்டபம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு

அரியாங்குப்பம்: அரியாங்குப்பத்தில், பழமை வாய்ந்த அய்யனார் கோவில் முன் மண்டபம், இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.அரியாங்குப்பம் - சின்ன வீராம்பட்டினம் சாலை ஓடைவெளியில், மிகவும் பழமை வாய்ந்த ஒண்டி அய்யனார் கோவில் உள்ளது. அந்த கோவில் பிரகாரம் சிதிலமடைந்ததால், கோவிலை இடித்துவிட்டு, திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் தொடர்ந்து, அறநிலையத் துறையினரிடம் வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, கோவிலில் உள்ள முன்பகுதி மண்டம் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது, கோவிலுக்குள் ஆளில்லாததால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம், அப்பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை