கூட்டுறவு கடன் சங்க வலைதள பக்கம் துவக்கம்
புதுச்சேரி: புதுச்சேரி அரசு பி மற்றும் சி பிரிவு ஊழியர்கள் கூட்டுறவு கடன் சங்கத்தின் புதிய வலைதளப் பக்கம் துவக்க விழா நடந்தது.கூட்டுறவு சங்க துணை பதிவாளர் சாரங்கபாணி, சங்கத் தலைவர் வினாயகமூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினர். சங்க இயக்குனர் வெங்கடேசன் வரவேற்றார். சங்கத் துணைத் தலைவர் ரவி, செயலாளர் சாமிகண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இயக்குனர்கள் கமல்ராஜ், கோகிலவாணி, அன்பரசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு அழைப்பளராக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் யஷ்வந்தய்யா புதிய வலை தளப்பக்கத்தினை துவக்கி வைத்தார்.விழாவில் முதுநிலை எழுத்தர் செந்தில், உதவியாளர் தமிழ்ச்செல்வன், சவுமியா, விக்னேஷ் உட்பட பலர் பங்கேற்றனர். இயக்குனர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.