| ADDED : ஜூன் 03, 2024 04:08 AM
அரியாங்குப்பம், : புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பது தள்ளி வைக்கப்பட்டதால் படகு குழாமில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.புதுச்சேரியில் கடந்த இரண்டு மாதங்களாக கடுமையான வெயில் தாக்கம் இருந்தது. அதனால், படகு குழாம், சுற்றுலா இடங்கள், பொழுது போக்கு பூங்காக்களில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக இருந்தது.கடலுார் சாலையில் உள்ள நோணாங்குப்பம் படகு குழாமில், வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு கிழமைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்தாண்டு கோடை வெயில் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாகவே இருந்தது.தற்போது வெயில் அதிகமாக இருப்பதால், புதுச்சேரி மற்றும் தமிழகத்தில், பள்ளிகள் திறப்பது தள்ளி வைக்கப்பட்டது. அதனால், தமிழகம் உள்ளிட்ட பகுதியில் இருந்து சுற்றுலாப் பயணிகள், மாணவ, மாணவிகள் பெற்றோருடன் நோணாங்குப்பம் படகு குழாமில் நேற்று குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.