உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சைபர் கிரைம் விழிப்புணர்வு 14ம் தேதி கட்டுரைப் போட்டி

சைபர் கிரைம் விழிப்புணர்வு 14ம் தேதி கட்டுரைப் போட்டி

புதுச்சேரி : புதுச்சேரி சைபர் கிரைம் சார்பில், வரும் 14ம் தேதி விழிப்புணர்வு கட்டுரைப் போட்டி நடக்கிறது.மத்திய அரசின் தொலை தொடர்பு அமைச்சகம், மொபைல் காலர்ட்யூன் மூலமாக சைபர் கிரைம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. புதுச்சேரி சைபர் கிரைம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தப்பட்டு வருகின்றன.பொதுமக்களிடையே அனைத்து வகையான சைபர் குற்றங்களை தடுக்கும் பொருட்டு, புதுச்சேரி சைபர் கிரைம் சார்பில் வரும் 14ம் தேதி காலை 11:00 மணிக்கு, விழிப்புணர்வு கட்டுரைப் போட்டி நடக்கிறது. கோரிமேடு சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் போட்டியில், பொதுமக்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தலாம்.சிறந்த முதல் மூன்று கட்டுரைகளுக்கு பரிசு வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை