உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / செவிலியரிடம் ரூ.18 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை

செவிலியரிடம் ரூ.18 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை

புதுச்சேரி : ஆன்லைனில் பகுதி நேர வேலை என கூறி செவிலியரிடம் ரூ. 18 லட்சம் பணத்தை திருடிய சைபர் கிரைம் மோசடி கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கருவடிக்குப்பத்தை சேர்ந்தவர் ராஜா மனைவி கோகிலா, 38; செவிலியர். இவரை கடந்த 2023ம் ஆண்டு செப். மாதம் தொடர்பு கொண்ட மர்ம நபர் தனியார் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்வதாகவும், அந்த நிறுவனத்தில் முதலீடு செய்து அதிக லாபம் பெறும் பகுதி நேர வேலை இருப்பதாகவும், சிறிய முதலீடு செய்தால் ஒரு நாளைக்கு ரூ.8 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும் என கூறினார்.இதை நம்பி கோகிலா ஆன்லைனில் கணக்கு துவங்கி 67 பரிவர்த்தனைகள் மூலம் ரூ.18.4 லட்சம் முதலீடு செய்தார். முதலீடு செய்து சம்பாதித்த பணத்தை எடுக்க முயன்றபோது, மேலும் பணத்தை முதலீடு செய்யுமாறு மோசடி கும்பல் கூறியது. அதன்பிறகே, அவர் மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.வைத்திக்குப்பத்தைச் சேர்ந்த ரூபாகோஷ் என்பவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் அமெரிக்காவில் உள்ள தனது முதலாளி போல் பேசி ரூ.50 ஆயிரத்தை ஏமாற்றினார். மூலக்குளத்தை சேர்ந்த சதீஷ் என்பவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.13,101 பணம் மோசடியாக எடுக்கப்பட்டது. திருபுவனை சேர்ந்த கார்த்திகேயன், கடன் செயலியில் கடன் வாங்கி, உரிய தேதிக்குள் திரும்பி செலுத்தினார். அதன்பிறகு, அடையாளம் தெரியாத நபர் கார்த்திகேயன் படத்தை ஆபாசமாக சித்தரித்து அனுப்பி மேலும் பணம் கேட்டு மிரட்டினார். இதற்கு பயந்து அவரும் ரூ.8 ஆயிரம் பணம் அனுப்பினார்.மணக்குப்பத்தை சேர்ந்த தாயம்மாள் என்பவர், வங்கியில் இருந்து அனுப்பியதுபோல் ஒரு லிங்க் மெசேஜ் வந்தது. லிங்கை உடனடியாக திறந்து பாஸ்வேர்டு உள்ளிட்டவை பதிவிட்டார். அடுத்த சில நிமிடத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.5,900 பணம் எடுக்கப்பட்டது. 5 பேர் ரூ.18.8 லட்சம் பணத்தை சைபர் கிரைம் மோசடி கும்பலிடம் இழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின்பேரில், சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ