ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபிக்கு 3 மாதம் இலவச ரீசார்ஜ் லிங்க் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
புதுச்சேரி: ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபிக்கு 3 மாதங்கள் இலவச ரீசார்ஜ் லிங்கை பொதுமக்கள் தொட வேண்டாம் என, சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து இணையவழி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:2025ம் ஆண்டு ஐ.சி.சி., சாம்பியன்ஸ் வென்ற இந்தியாவை கொண்டாட பி.சி.சி.ஐ., மற்றும் ஐ.சி.சி., கிரிக்கெட் வாரியம் மூன்றும் மாதங்கள் இலவச ரீசார்ஜ் செய்வதாக கூறி சைபர் கிரைம் குற்றவாளிகள் உருவாக்கிய போலி லிங்கை சமூக வலைதளங்களில் பரப்பி, வருகின்றனர்.இச்செய்தி முற்றிலும் பொய்யான செய்தி. இணையவழி குற்றவாளிகள் உங்களிடம் பணம் பறிப்பதற்காக மேற்கூறிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இச்செய்தியை யாரும் நம்ப வேண்டாம். அவர்கள் அனுப்பும் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம்.இணைய வழி குற்றவாளிகள் அனுப்பும் லிங்கை கிளிக் செய்தால் உங்களுடைய மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டு உங்களுடைய வங்கி தகவல்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் திருடப்பட்டு உங்களுடைய பணத்தை இழக்க நேரிடும். பொதுமக்கள் யாரேனும் இதன் மூலம் பணத்தை இழந்து இருந்தால் மற்றும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் சைபர் கிரைம் காவல் நிலையத்தின் இலவச தொலைபேசி எண்: 1930 5 04132276144, 9589205246 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும், www.cybercrime.gov.inஇணையதளம் மூலமாக புகார் அளிக்கலாம்.