உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / செட்டிப்பட்டு அய்யனாரப்பன் கோவில் செல்லும் சாலை சேதம்

செட்டிப்பட்டு அய்யனாரப்பன் கோவில் செல்லும் சாலை சேதம்

புதுச்சேரி: செட்டிப்பட்டு அய்யனாரப்பன் கோவில் செல்லும் சாலை சேதமடைந்துள்ளதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மண்ணாடிப்பட்டு தொகுதி செட்டிப்பட்டு அய்யனாரப்பன் கோவில் வீதியில் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இச்சாலை வழியாக பெரியாண்டவர் மற்றும் அய்யனாரப்பன் கோவில்களுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட தார் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறி உள்ளது. தற்போது இரவு நேரங்களில் பெய்து வரும் மழையின் காரணமாக சாலை சேதம் அடைந்து சேறும் சகதியுமாக, பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி உள்ளது.இதனால், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே சேதமடைந்துள்ள செட்டிப்பட்டு ஐய்யனாரப்பன் கோவில் செல்லும் சாலையை உடனே சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை