உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மகள் மாயம்: தாய் புகார்

மகள் மாயம்: தாய் புகார்

அரியாங்குப்பம்: வீட்டில் இருந்த மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் செய்தார். முருங்கப்பாக்கம் அருகே உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் மாணவி, வயது 16; இவர் நேற்று முன்தினம் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். அவரது தாய் வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு வந்து பார்க்கும் போது, அவரை காணாமல் அதிர்ச்சியடைந்தார். பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. அவரது தாய் கொடுத்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை