கொலை மிரட்டல் 3 பேருக்கு வலை
புதுச்சேரி: சின்ன காலாலப்பட்டு, ஆலமரத்து தெருவை சேர்ந்தவர் புவனேஷ், 35; இவர் பெரியக்காலாப்பட்டு முருகன் கோவில் அருகே நின்றிருந்த போது, பெரிய காலாப்பட்டு பகுதியை சேர்ந்த அன்பு, கனகசெட்டிகுளத்தை சேர்ந்த ஆகாஷ், விநாயகமூர்த்தி ஆகிய மூன்று பேரும் மது போதையில் பைக்கில் புவனேஷ் மீது இடிப்பது போல வந்து தகராறு செய்தனர். அதை தட்டி கேட்ட புவனேைஷ, அன்பு உட்பட 3 பேரும் சேர்ந்து, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். அதில், காயமடைந்த, அவர், காலாப்பட்டு, போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து, அன்பு உட்பட மூவரையும் தேடிவருகின்றனர்.