உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தொழில் பூங்கா, புதிய தொழிற்பேட்டை புதுச்சேரிக்கு கொண்டு வர கோரிக்கை

தொழில் பூங்கா, புதிய தொழிற்பேட்டை புதுச்சேரிக்கு கொண்டு வர கோரிக்கை

புதுச்சேரி: புதுச்சேரிக்கு தொழில் பூங்கா, புதிய தொழிற்பேட்டை கொண்டு வர முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, சிறு குறு நடுத்தர தொழில் முனைவோர் சங்க தலைவர் அருள்செல்வம் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது: இந்த பட்ஜெட்டில், எதிர்பார்த்த சில திட்டங்கள் கிடைக்கப் பெறவில்லை. ஆனாலும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு கிடைக்கக்கூடிய முத்ரா வங்கி லோன் ரூ.10 லட்சத்திலிருந்து, 20 லட்சமாக உயர்த்தி உள்ளனர். சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு உத்தரவாத கடன் திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கி நடப்பு தொழில் நிறுவனங்கள் புதிதாக இயந்திரங்கள் வாங்குவதற்கு குறைந்த வட்டியில் பிணையம் இல்லாத கடன் பெறுவதற்கு வழிவகை செய்துள்ளனர்.நாடு முழுவதும், 12 தொழில் பூங்காக்கள் துவங்குவதற்கு ஒப்புதலும், 20 புதிய தொழிற்பேட்டைகளை உருவாக்குவதற்கு திட்டமும் உள்ளதாக கூறியுள்ளனர்.இதில் ஏதேனும் ஒன்றை புதுச்சேரிக்கு கொண்டு வருவதற்கு, நம் மாநில முதல்வர், தொழில் துறை அமைச்சர் முயற்சிக்க வேண்டும். புதிதாக பணியில் சேரும் இளைஞர்களுக்கும், பணி அமர்த்தும் தொழில் நிறுவனங்களுக்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மூலம் சலுகைகள் செய்துள்ளனர்.வெளி மாநில தொழிலாளர்களை நம்பி இருக்கும் சிறு குறு தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதிகளான மேட்டுப்பாளையம் சேதராப்பட்டு போன்ற பகுதிகளில் டார்மென்ட்ரி தங்கும் விடுதி ஏற்படுத்தினால் தொழில் நிறுவனங்களுக்கு ஏதுவாய் இருக்கும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை