உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இஸ்ரேல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

இஸ்ரேல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: பாலஸ்தீன அப்பாவி மக்களை கொல்லும் இஸ்ரேல் அரசின் இனப் படுகொலையை கண்டித்து, காமராஜர் சிலை அருகில், அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக்கழகம், புதுச்சேரி மாநிலக்குழு சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தின் புதுச்சேரி மாநிலக்குழு தலைவர் நாரா கலைநாதன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக, முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் கலந்து கொண்டார். பொதுச்செயலாளர் ஜீவானந்தம் உரையாற்றினார். இண்டியா கூட்டணி கட்சி நிர்வாகிகள், வக்கீல்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இதில், சர்வதேச மனிதநேய குரலுக்கு செவி சாய்க்க வேண்டும் மற்றும் இந்திய அரசு இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. வக்கீல் பிரதீஷ் இருதயராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Sathyanarayanan Sathyasekaren
ஜூலை 07, 2024 05:59

இங்கே போராடியவர்களின் குடும்ப பெண்களை, இஸ்ரேலில் நடந்ததுபோல் நிர்வாணப்படுத்தி நடுவீதியில் முடியை பிடித்து இழுத்து சென்றால் இவர்களது நடவடிக்கை எப்படி இருக்கும்? அந்த விடியோவை பார்த்த எந்த மனிதனும் பாலசுதீனத்திற்கு, ஹமாஸ் தீவிரவாத இயக்கத்திர்ற்கு ஆதரவாக பேசமாட்டான். இந்த அறிவாளிகள் காஷ்மீரில் ஹிந்துக்கள் படுகொலை செய்யப்பட்டபோது தூங்கிக்கொண்டு இருந்தார்கள்.


மேலும் செய்திகள்



புதிய வீடியோ