உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வீடு கட்டும் பயனாளிகளுக்கு தவணை தொகை வழங்கல்

வீடு கட்டும் பயனாளிகளுக்கு தவணை தொகை வழங்கல்

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த வீடுகட்டும் பயனாளிகளுக்கு தவனை தொகையினை துணை சபாநாயகர் ராஜவேலு வழங்கினார்.ஆதி திராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், நெட்டப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த பயனாளிகளுக்கு கல் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் முதல் தவணையாக 24 நபர்களுக்கு 2 லட்சத்து 20 ஆயிரமும், 22 பயனாளிகளுக்கு மூன்றாம் தவணை தொகையாக ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் என, மொத்தம் ரூ. 74 லட்சம் ரூபாய் நலத்திட்டத்தினை துணை சபாநாயகர் ராஜவேலு பயனாளிகளுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில், ஆதிதிராவிட நலத்துறை ஆய்வாளர் ஏழுமலை, மணி வண்ணன், சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !