உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வீடு கட்டும் பயனாளிகளுக்கு தவணை தொகை வழங்கல்

வீடு கட்டும் பயனாளிகளுக்கு தவணை தொகை வழங்கல்

புதுச்சேரி: வில்லியனுாரில், வீடு கட்டும் பயனாளிகளுக்கான முதல் கட்ட தவணை தொகையை எதிர்க்கட்சித் தலைவர் சிவா வழங்கினார்.புதுச்சேரி அரசு குடிசை மாற்று வாரியம் மூலம், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில், வில்லியனுார் தொகுதி பயனாளிகளுக்கு கல் வீடு கட்டுவதற்காக முதல் தவணைத் தொகையாக, ரூ. 1.20 லட்சம் வீதம், 42 பயனாளிகளுக்கு மொத்தம், 50.40 லட்சம் ரூபாய்க்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியில், எதிர்க்கட்சித் தலைவர் சிவா, பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான அரசாணை மற்றும் முதல் தவணைத் தொகைக்கான ஆணையை வழங்கினார்.நிகழ்ச்சியில் குடிசை மாற்று வாரிய முதன்மை செயல் அதிகாரி சுந்தர்ராஜன், உதவி பொறியாளர் ரவி, இளநிலை பொறியாளர் அனில்குமார், தி.மு.க., தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி, கலை இலக்கிய அணி அமைப்பாளர் சீனு மோகன்தாசு, வர்த்தக அணி அமைப்பாளர் ரமணன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ