உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நெற்பயிரில் நோய் தாக்கம்; வல்லுனர் குழு கள ஆய்வு

நெற்பயிரில் நோய் தாக்கம்; வல்லுனர் குழு கள ஆய்வு

புதுச்சேரி: பாகூரில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு உட்பட்ட வயல்களை, விவசாயிகள் நலத்துறை மற்றும் காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய வல்லுனர் குழுவினர் கள ஆய்வு செய்து, ஆலோசனை வழங்கினர்.பாகூரில், நடப்பு சொர்ணவாரி பருவத்தில் பயிரிட்டுள்ள நெற்பயிர்களில் பூச்சிகள் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஐ.ஆர்.50, என்ற ரகத்தில் இத்தகைய பாதிப்பு அதிகமாக உள்ளது.இதுகுறித்த புகாரை தொடர்ந்து பாகூர் கோட்ட வேளாண் இணை இயக்குநர் சிவபெருமான் தலை மை யில் காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய வல்லுனர்கள், பூச்சியியல் வல்லுனர் விஜயகுமார், துணை இயக்குநர் குமாரவேல், வேளாண் அலுவலர் பரமநாதன் ஆகியோர் கள ஆய்வு செய்தனர்.அதில், அளவுக்கு அதிகமான யூரியா சத்து மண்ணில் இடுவதையும், ஆண்டுக்கு மூன்று போக நெல் பயிரிடுவதையும் தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை விவசாயிகளுக்கு வழங்கினர்.ஆய்வின்போது, உதவி வேளாண் அலுவலர் முத்துக்குமரன், செயல் விளக்க உதவியாளர் குணசீலன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை