நோணாங்குப்பம் ஆற்று பாலத்தில் விளக்குகள் எரியாததால் அவதி
அரியாங்குப்பம் : நோணாங்குப்பம் ஆற்று பாலத்தில் மின் விளக்குகள் எரியாமல் இருப்பதால், இரவு நேரங்களில் விபத்து ஏற்பட்டு வருகிறது.புதுச்சேரி - கடலுார் சாலையை இணைக்கும் நோணாங்குப்பம் ஆற்று பாலம் உள்ளது. பாலத்தில் இரவில் மின் விளக்கு எரியாமல் இருந்ததால், வாகனங்கள் மோதி கொண்டு, பாலத்தின் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. மேலும், பாலத்தின் அருகே படகு குழாம் உள்ளதால், வார விடுமுறையில், சுற்றுலா பயணிகள் வருவதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு பொதுப்பணித்துறை மூலம் பாலத்தின் இரு பகுதிகளில் புதிய மின் விளக்குகள் அமைக்கப்பட்டு மின்விளக்குகள் அனைத்தும் எரிந்தது. கடந்த ஒரு வாரமாக பாலத்தில் மின் விளக்கு எரியாமல் அப்பகுதி இருண்டு கிடக்கிறது. அதனால், வாகனங்கள் மோதி கொள்கின்றன. கடலுாருக்கு செல்லும் முக்கிய சாலையாக இருப்பதால், பாலத்தில் எரியாமல் உள்ள மின் விளக்கை சரி செய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.