உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வீட்டு உபயோக சிலிண்டர் ஓட்டலில் பறிமுதல்

வீட்டு உபயோக சிலிண்டர் ஓட்டலில் பறிமுதல்

புதுச்சேரி: ஓட்டலில் பயன்படுத்தப்பட்ட வீட்டு உபயோக காஸ் சிலிண்டரை உணவு கடத்தல் பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். புதுச்சேரி உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து சென்றனர். காட்டேரிக்குப்பம், சுத்துக்கேணி பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஓட்டல் உரிமையாளரான காட்டேரிக்குப்பத்தை சேர்ந்த மணிகண்டன், 38, என்பவர் மீது உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஓட்டலில் பயன்படுத்திய இரண்டு வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !