உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி  துப்பாக்கி சுடுவோர் சங்கம் சார்பில் டிராப் சுடும் போட்டி 

புதுச்சேரி  துப்பாக்கி சுடுவோர் சங்கம் சார்பில் டிராப் சுடும் போட்டி 

புதுச்சேரி : புதுச்சேரி மாநில துப்பாக்கி சுடுவோர் சங்கம் சார்பில் 8 வது டிராப் சுடும் போட்டி, புதுக்கோட்டை ராயல் விளையாட்டு சங்கத்தில் இரு நாட்கள் நடந்தது. பறவை போன்று பறக் கும் பொருளை குறிபார்த்து சுட்டுவோருக்கு புள்ளிகள் அடிப்படையில் பரிசு வழங் கப்படும். ஜூனியர், ஆண்கள் மற்றும் மாஸ்டர் ஆண்கள் என 3 பிரிவுகளில் போட்டி நடந்தது.மாஸ்டர் ஆண்கள் டபுள் டிராப் எனப்படும் 2 பறக்கும் பொருளை சுட்டு வீழ்த்தும் பிரிவில், ரவீந்திரன் முதல் பரிசு பெற்றார். மாஸ்டர் ஆண்கள் பிரிவில் கணபதி, கருணாகரன், ரவிந்திரன் ஆகியோர் முதல், 2 மற்றும் 3வது பரிசு பெற்றனர்.ஆண்கள் பிரிவில் அவிநாஷ், கணபதி, அருள்ராஜ் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு புதுக்கோட்டை விளையாட்டு சங்க தலைவர் ராஜா ராஜகோபால தொண்டைமான் பதக்கம் வழங்கி பாராட்டி னார். சங்க நிர்வாகிகள் பீர்முகமது, திருநாவுக்கரசு போட்டிக்கான ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை