| ADDED : ஏப் 13, 2024 04:34 AM
புதுச்சேரி: தனிமையில் வசித்த முதியவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.ரெட்டியார்பாளையம், புதுநகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் மோகன், 84. இவருக்கு நான்கு மகன்கள், இரண்டு மகள்கள். இதில் ஐந்து பேருக்கு திருமணமாகிவிட்டது. கடைசி மகன் இளங்கோவுடன் வசித்து வந்தார். மோகன் மனைவி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். மகனும் காலையில் வேலைக்கு சென்றால் இரவு 10:00 மணிக்கு மேல் தான் வீட்டிற்கு வருவார். இதனால் தனிமையில் இருந்த மோகன், விரக்தியடைந்து நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து மகன் இளங்கோ கொடுத்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.