மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
5 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
5 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
6 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
6 hour(s) ago
புதுச்சேரி: மூப்பனார் பிறந்த நாளை யொட்டி, அவரது சிலைக்கு அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.புதுச்சேரி அரசு சார்பில், மூப்பனார் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. மரப்பாலம் சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு, அரசு சார்பில், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திருமுருகன், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் அசோக்பாபு, சம்பத், பாஸ்கர் ஆகியோர் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.காங்., சார்பில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., வக்கீல் சுவாமிநாதன் மற்றும் நிர்வாகிகள் மலரஞ்சலி செலுத்தினர். த.மா.கா., சார்பில் ஐ.டி., அணியை சேர்ந்த டாக்டர் பாலமுருகன் உள்ளிட்டோர் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.
5 hour(s) ago
5 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago