| ADDED : ஏப் 06, 2024 05:36 AM
புதுச்சேரி: புதுச்சேரி அகில இந்திய வானொலி நிலையம் செய்திப் பிரிவு, தலை மைத் தேர்தல் அலுவலகம் சார்பில், லோக்சபா வாக்காளர் களுக்கான தேர்தல் விழிப்பணர்வு தமிழ் வாசகப் போட்டி நடத்தப்பட்டு பரிசளிப்பு விழா நடந்தது.ரெட்டியார்பாளையம் தேர்தல் துறை அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு, அகில இந்திய வானொலி செய்திப் பிரிவு துணை இயக்குநர் சிவக்குமார் தலைமை தாங்கினார். துணைத் தலைமைத் தேர்தல் அலுவலர்கள் தில்லைவேல், ஆதர்ஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி உதவி தமிழ் பேராசிரியர் விஜயராணி, அகில இந்திய வானொலி நிலைய நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் எலிசபெத், செந்தில் குமார் ஆகியோர் நடுவர்களாக இருந்து சிறந்த வாசகங்களை தேர்வு செய்தனர்.முதல் பரிசாக ரூ.3 ஆயிரம் சத்தியமூர்த்திக்கும், இரண்டாம் பரிசாக ரூ. 2 ஆயிரம் முத்துக்கருப்பன், காரைக்கால் இளம்பரிதி, மூன்றாம் பரிசாக ரூ. ஆயிரம் துரைராஜன், அம்பிகாதேவி, லோகேஷ்வரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். விழாவில் சிறப்பு அழைப்பளராக தலைமைத் தேர்தல் அலுவலர் ஜவஹர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி, லோக்சபா தேர்தலில் வாக்காளர்கள் தேர்தல் அன்று அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் என, கேட்டுக் கொண்டார்.