உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தேர்தல் செலவின நடைமுறை: பார்வையாளர் ஆலோசனை

தேர்தல் செலவின நடைமுறை: பார்வையாளர் ஆலோசனை

புதுச்சேரி : புதுச்சேரிக்கு வருகை புரிந்துள்ள செலவினப் பார்வையாளர் ஐ.ஆர்.எஸ்., அதிகாரி, லட்சுமி காந்தா, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு என, நியமிக்கப்பட்டுள்ள உதவி செலவின பார்வையாளர்களை, நேற்று காலை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கலந்துரையாடினார்.அப்போது அவர், தேர்தல் செலவின நடைமுறைகள் மற்றும் கண்காணிப்பு குறித்து இதுவரை மேற்கொண்ட பணிகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பான விபரங்களை கேட்டறிந்தார். மேலும், பணியில் மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகள், நடைமுறைகள் குறித்து உதவி செலவினப் பார்வையாளர்களிடம் விளக்கினார். கூட்டத்தில், உதவி கலெக்டர் யஷ்வந்த் மீனா, நோடல் அதிகாரி ஜெகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இதையடுத்து, மதியம் 3:30 மணிக்கு, அவர் கலால் துறை அதிகாரிகளைச் சந்தித்து தேர்தல் நேரத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார். பின்னர் புதுச்சேரியைச் சார்ந்த முன்னோடி வங்கி அதிகாரிகளிடம், வங்கிகளில் மேற்கொள்ளப்படும் சந்தேகத்திற்குரிய மற்றும் அதிகப்படியான பண பரிவர்த்தனை குறித்தும் விளக்கினார். தொடர்ந்து இன்று அவர், புதுச்சேரியில் தங்கி, வேட்பாளர் செலவினங்கள் தொடர்பான பணிகளைக் கவனிப்பார். மீண்டும் வரும், 26ம் தேதி முதல் புதுச்சேரியில் முகாமிட்டு, தேர்தல் நாள் வரை, வேட்பாளர்களின் செலவினங்களை கண்காணிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை