உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரூ.71.08 லட்சத்தில் மேம்பாட்டு பணி ஏம்பலம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

ரூ.71.08 லட்சத்தில் மேம்பாட்டு பணி ஏம்பலம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

பாகூர்: ஏம்பலம் தொகுதியில் 71.08 லட்ச ரூபாய் செலவில் பல்வேறு மேம்பாட்டு பணிகளை, மோகன்தாஸ் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.  பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் ஏம்பலம் தொகுதி சேலிமேடு பேட்டில், 20.52 லட்ச ரூபாய் செலவில், வாய்க்காலின் மீது பாலம் அமைத்தல், குடியிருப்புபாளையம் இடுகாட்டில் 9 லட்ச ரூபாய் செலவில், குடிநீர் வசதி மற்றும் சாலையை மேம்படுத்தல், சார்காசிமேடு கிராமத்தில் 17. 65 லட்ச ரூபாய் செலவில், குடிநீர் வசதி, சுடுகாட்டு பாதை மற்றும் தகன மேடை சீரமைத்தல் மற்றும் 23.91  லட்ச ரூபாய் செலவில் ஆலடிமேடு கிராமத்தில் குடிநீர் மற்றும் சாலை மேம்பாட்டு பணி, பனித்திட்டு கிராமத்தில் சிறுவர் விளையாட்டு பூங்கா, கந்தன் பேட் கிராமத்தில் விளையாட்டு திடலுக்கு மதில் சுவர் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக மோகன்தாஸ் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு, பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சதாசிவம், உதவி பொறியாளர் பாலமுருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி