மேலும் செய்திகள்
2வது நாளாக சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
03-Jun-2026
புதுச்சேரி: ஈடன் கடற்கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என மா.கம்யூ., மாநில செயலாளர் ராமசந்திரன் கோரிக்கை வைத்துள்ளார். ரெட்டியார்பாளையம் மா.கம்யூ அலுவலகத்தில் மாநில செயலாளர் ராமச்சந்திரன் கூறியதாவது: சின்னவீராம்பட்டினம், ஈடன் கடற்கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும். ஆக்கிரமிக்கப்பட்ட கடலோர நீர்நிலைகள், ஆற்றுப்பகுதி மற்றும் சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதிகளை அதன் இயற்கை நிலைக்கு கொண்டு வர வேண்டும். கடல் மற்றும் கடற்கரை பகுதிகள் மீதுள்ள மீனவ மக்களின் பாரம்பரிய உரிமைகளை அரசு அங்கீகரித்து, பாதுகாக்க வேண்டும். ஈடன் கடற்கரையில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களை புதுச்சேரி அரசு அகற்றத் தவறினால், விரைவில் மறியல் மற்றும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் பொது செயலாளர் மலையாளத்தான், மா.கம்யூ., நிர்வாகிகள் மற்றும் மீனவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
03-Jun-2026