உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மணக்குள விநாயகர் கல்லூரியில் பொறியாளர் தின விழா

மணக்குள விநாயகர் கல்லூரியில் பொறியாளர் தின விழா

புதுச்சேரி : மதகடிப்பட்டு, மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில் 25வது வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு 'பொறியாளர் தினம்' இன்னாவேட்டர்ஸ் தின விழாவாக நடந்தது.மணக்குள விநாயகர் கல்விக் குழுமத்தின் தலைவர் மற்றும் மேலான் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் முன்னிலை வகித்தனர். கல்லுாரி இயக்குனர் வெங்கடாசலபதி வரவேற்றார்.சென்னை, டெக் மஹேந்திரா நிறுவன மனிதவள இணை மேலாளர் அருண் கலந்து கொண்டு சிறந்த செயல் திட்டங்களை சமர்பித்த மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.தேசிய அளவிலான இப்போட்டியில் சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, ராஜலட்சுமி பொறியியல் கல்லுாரி, மஹேந்திரா காலேஜ் ஆஃப் இஞ்ஜினியரிங், கொங்கு பொறியியல் கல்லுாரி, வேல்டெக் பல்கலைக் கழகம், டாக்டர் மகாலிங்கம் கல்லுாரி போன்ற 50க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லுாரியை சேர்ந்த மணவர்களின் 350 க்கும் மேற்பட்ட செயல் திட்டங்களை சம்ர்பித்தனர்.சிறந்த செயல் திட்டங்களை சமர்பித்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரூ. 1 லட்சம் பகிர்ந்து அளிக்கப்பட்டது. இதில், அனைத்து டீன்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.அகாடமிக் டீன் அன்புமலர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை