உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கடலில் மூழ்கி இறந்த மாணவர்கள் குடும்பத்திற்கு கருணை தொகை

கடலில் மூழ்கி இறந்த மாணவர்கள் குடும்பத்திற்கு கருணை தொகை

புதுச்சேரி: கடல் அலையில் சிக்கி உயிரிழந்த நான்கு மாணவர்களின் குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.புதுச்சேரி, நெல்லித்தோப்பு டி.ஆர். நகர், 2வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் மனைவி மீனாட்சி.இவர்களின் மகள்கள் மோகனா, 16; லேகா, 14; இருவரும் சுப்ரமணிய பாரதியார் பள்ளியில் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு படித்தனர்.மீனாட்சியின் குடும்ப நண்பர்களான சாரம் பாலாஜி நகர் கிேஷார், 17; டிப்ளமோ கேட்ரிங் மாணவர். எல்லப்பிள்ளைச்சாவடி சாரதாம்பாள் கோவில் அருகே வசிக்கும் முருகையன் மகன் நவீன், 17; பிளஸ் 2 மாணவர். இவர்கள் நான்கு பேரும் கடந்தாண்டு டிசம்பர் 31ம் தேதி பழைய துறைமுகம் பகுதியில் கடற்கரையில் விளையாடிக்கொண்டு இருந்தபோது கடல் அலையில் சிக்கி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் வீதம் மொத்தம் 20 லட்சம் ரூபாய் கருணை தொகையினை முதல்வர் ரங்கசாமி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை