உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மதுக்கடைகள் மூடுவதற்கான தேதி கலால் துறை அரசாணை வெளியீடு

மதுக்கடைகள் மூடுவதற்கான தேதி கலால் துறை அரசாணை வெளியீடு

புதுச்சேரி : லோக்சபா தேர்தலையொட்டி அனைத்து மதுக்கடைகளை எந்தந்த தேதிகளில் மூட வேண்டும் என கலால் துறை அறிவித்துள்ளது.புதுச்சேரி லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19 ம்தேதியும்,ஓட்டு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடக்கின்றது.இதனையொட்டி புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியத்தில் உள்ள அனைத்து வகை மதுபார்களும், மது கடைகளும் ஏப்ரல் 17ம் தேதி முதல் ஏப்ரல் 19ம் தேதி வரை மூட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓட்டு எண்ணிக்கை நடக்கும் ஜூன் 4ம் தேதியும் அனைத்து மதுகடைகளை மூட வேண்டும் என கவர்னர் உத்தரவு பிறப்பிதுள்ளார்.இதேபோல் கேரளா மாநிலத்தில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 26 ம்தேதியும்,ஓட்டு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதியும் நடக்க உள்ளது.எனவே கேரளா மாநிலத்தினையொட்டி உள்ள புதுச்சேரியின் மாகி பிராந்தியத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும், ஏப்ரல் 24ம் தேதி முதல் ஏப்ரல் 26 ம்தேதி வரையிலும்,ஓட்டு எண்ணிக்கை நடக்கும் ஜூன் 4ம் தேதியும் மூட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.இதேபோல் ஆந்திரா மாநிலத்தில் லோக்சபா தேர்தல் மே 13ம் தேதியும்,ஓட்டு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடக்கும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.அதையடுத்து ஆந்திராவையொட்டியுள்ள புதுச்சேரி பிராந்தியமான ஏனாமில் மே 11ம் தேதி முதல் 13 ம்தேதி வரையிலும் மூட என உத்தரவிட்டு,அரசாணையாக கலால் துறை வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ