உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரேஷன் கார்டுகளுக்கு கூடுதல் பணம்: அன்பழகன் வலியுறுத்தல்

ரேஷன் கார்டுகளுக்கு கூடுதல் பணம்: அன்பழகன் வலியுறுத்தல்

புதுச்சேரி: புதுச்சேரியில் ரேஷன் கார்டுகளுக்கு, தரமான அரிசி அல்லது தற்போது வழங்கப்படும் பணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என,அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளார்.அவர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து அளித்த மனு; புதுச்சேரி மாநிலத்தில் பா.ஜ., - என்.ஆர்.காங்., கூட்டணி ஆட்சியில், மொத்தமுள்ள, 3 லட்சத்து 60 ஆயிரம் ரேஷன்கார்டுகளில், 1 லட்சத்து, 80 ஆயிரம் சிகப்பு கார்டுகள், 25 ஆயிரம் ஏ.ஏ.ஒய் கார்டுகளுக்கு 600 ரூபாய், 1 லட்சத்து, 55 ஆயிரம் மஞ்சள் நிற கார்டுகளுக்கு 300 ரூபாய் வீதம்,வங்கியில் பணமாக செலுத்தப்பட்டு வருகிறது.இலவச அரிசிக்கு பதிலாக பணமாக செலுத்தப்படும் போது, அதை கொண்டு,சிகப்பு கார்டு வைத்துள்ளவர்கள், 20 கிலோ அரிசியும், மஞ்சள் நிற கார்டு வைத்துள்ளவர்கள், 10 கிலோ அரிசியும், தற்போது விற்கப்படும் அரிசியின் விலையேற்றத்தால் வாங்க முடியவில்லை.கடந்த, 2 ஆண்டுகளாக ஏறி வரும் விலையேற்றத்தினால், சாப்பாட்டு அரிசி 50 ரூபாய்க்கு குறைந்து எங்கும் விற்கவில்லை. இதில் உள்ள உண்மை நிலையை உணர்ந்து தரமான சாப்பாட்டு அரிசியை அரசே வழங்க வேண்டும்.இல்லை எனில், 20 கிலோ அரிசிக்கு பதிலாக பணமாக வழங்கும் போது, சிகப்பு கார்டு உள்ளவர்களுக்கு, 1,000 ரூபாய் வழங்க வேண்டும். மஞ்சள் நிற கார்டுதாரர்களுக்கு 500 ரூபாய் வழங்க வேண்டும். இதற்கானஉரிய ஆணையை முதல்வர் வெளியிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்