உள்ளூர் செய்திகள்

தீமிதி திருவிழா

நெட்டப்பாக்கம்: ஏம்பலம் அடுத்த கோர்க்காடு திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.இதையொட்டி காலை 9.00 மணிக்கு அம்மனுக்கு அபிேஷகம் ஆராதனைகள் நடந்தது. இன்று முதல் 22ம் தேதி வரை தினமும் காலை அம்மனுக்கு அபிேஷகம் ஆராதனைகளும், இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. 19ம் தேதி மாலை 6.00 மணிக்கு திருக்கல்யாணம் உற்சவமும், 20ம் தேதி இரவு கரகத்திருவிழாவும், 21ம் தேதி மாலை தீமிதி திருவிழா நடக்கிறது.ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் வெங்கடேசன், ஆறுமுகம், ராஜா, முத்து, ஏகாம்பரம் மற்றும் கோர்க்காடு கிராம மக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை