மீனவர் பேரவை மகளிர் தின விழா
புதுச்சேரி: தமிழ்நாடு மீனவர் பேரவை, புதுச்சேரி மகளிர் பேரவை சார்பில், சர்வதேச மகளிர் தின விழா புதுச்சேரி தனியார் ஓட்டலில் நடந்தது.புதுச்சேரி மாநில மீனவர் பேரவை தலைவர் குணசீலன் வரவேற்றார். மீனவர் மகளிர் பேரவை தலைவி சுகந்தி ராமதாஸ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக அமைச்சர் லட்சுமிநாராயணன் கலந்து கொண்டு மீனவ குடும்ப தலைவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீனவர் பேரவை நிறுவனர் அன்பழகனார், தேசிய தலைவர் இளங்கோ, ஷியாம்லால், அனைத்து வியாபரிகள் சங்க பொது செயலாளர் ராஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மீனவர் பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கலை நிகழ்ச்சிகள் நடந்தது.