உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மீன் வியாபாரி தற்கொலை

மீன் வியாபாரி தற்கொலை

புதுச்சேரி: துாக்க மாத்திரை சாப்பிட்டு மீன் வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.கிருமாம்பாக்கம் அடுத்த மூர்த்தி புதுக்குப்பம், சுனாமி நகரைச் சேர்ந்தவர் முருகன், 52; மீனவர். இவர் கடலுார் வியாபாரி மணியிடம் ரூ. 32 லட்சம் மதிப்பிலான மீன்களை பல லோடு லாரிகள் மூலம் அனுப்பியுள்ளார். அவர் அதற்கு ரூ. 20 லட்சம் மட்டும் முருகனிடம் கொடுத்தார். மீதி பணத்தை கேட்டு முருகன் கேட்டபோது மணி அலைக்கழித்துள்ளார்.இதனால் மனமுடைந்த முருகன் கடந்த 3ம் தேதி துாக்கு மாத்திரை சாப்பிட்டு மயங்கினார். ஜிப்மரில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.இதுகுறித்து அவரது மகன் முகிலன் கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ