உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 4 பேரிடம் ரூ.37 லட்சம் மோசடி

4 பேரிடம் ரூ.37 லட்சம் மோசடி

புதுச்சேரி : புதுச்சேரியில் 4 பேரிடம் 37 லட்சம் ரூபாய் மோசடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.ரெட்டியார்பாளையத்தை சேர்ந்தவர் ஷ்ரவாணி. இவரை மொபைல் போனில் தொடர்பு கொண்ட நபர், விசாகப்பட்டினம் பகுதியில் உள்ள இரும்பு நிறுவனத்தில் இருந்து பேசுவதாக முதலில் அறிமுகம் செய்தார்.பின், குறைந்த விலைக்கு இரும்புகள் விற்பனை செய்வதாக, கூறினார். அதை நம்பி, அவர் 30.97 லட்சம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.சண்முகாபுரத்தை சேர்ந்தவர் வடிவேல். இவரை வங்கி அதிகாரி போல தொடர்பு கொண்ட நபர் கே.ஒய்.சி., புதுப்பிக்க வேண்டும். அதற்கான வங்கி விபரங்களை தர வேண்டும் என, கூறினார்.அதை நம்பி, அவர், கிரெடிட் கார்டு, விபரங்கள் அதனுடன் மொபைலுக்கு வந்த ஓ.டி.பி., எண்ணையும் கொடுத்தார். அடுத்த நிமிடத்தில், அவரது வங்கி கணக்கில் இருந்து 61 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது.அதே போல், லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த ராமலிங்கம் என்பவரது வங்கி கணக்கில் இருந்து 25 ஆயிரம் எடுக்கப்பட்டது.அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் என்பவரை தொடர்பு கொண்ட நபர், கார் விற்பனை செய்வதாக கூறினார். அதை நம்பி, அவர், 5.20 லட்சம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.இதுகுறித்து, 4 பேர் கொடுத்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை