மேலும் செய்திகள்
அரியாங்குப்பத்தில் பா.ஜ., காலண்டர் வழங்கல்
9 hour(s) ago
ஐகோர்ட் நீதிபதி முதல்வருடன் சந்திப்பு
9 hour(s) ago
புதிய அங்கன்வாடி அமைக்க பூமி பூஜை
9 hour(s) ago
காகிதக்கூழ் கைவினைப் பயிற்சி
9 hour(s) ago
புதுச்சேரி, : ஓராண்டு கால உதவித் தொகையுடன் கூடிய இலவச போட்டித் தேர்வு பயிற்சி திட்டத்தின் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மைய துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி கோட்டூர்சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையமானது, மத்திய அரசு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் புதுச்சேரியில் நிறுவப்பட்டுள்ளது.படித்த வேலையற்ற எஸ்.சி., - எஸ்.டி., பிரிவை சேர்ந்த வேலை தேடுபவர்களுக்கு அரசு போட்டி தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்கும் இம்மையத்தின் மூலம் வழங்கப்படும் ஓராண்டு காலஉதவிதொகையுடன் கூடிய சிறப்பு இலவச பயிற்சி ஜூலை 1ம் தேதி முதல் நடத்தப்பட உள்ளது.இந்த இலவச போட்டி தேர்வு பயிற்சியில் சேர ஆர்வம் உள்ள பிளஸ் 2 தேர்ச்சி அல்லது பட்ட படிப்பை முடித்த மாணவர்களுக்கு விண்ணப்பங்கள் மையத்தில் வழங்கப்படுகிறது. பயிற்சியில் சேர 18 வயது முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். பயிற்சி காலத்தில் மாதம் 1,000 ரூபாய் உதவித் தொகையும், இலவச போட்டி தேர்வுக்கான பயிற்சி புத்தகங்கள், எழுது பொருட்கள் வழங்கப்படும். பயிற்சி சேர வரும் 20ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும். மேலும் விபரங்களுக்கு ரெட்டியார்பாளையம் கனரா வங்கி இரண்டாம் தளம், ஆதிதிராவிடர் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி அல்லது 0413-2200115 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago