உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இலவச மருத்துவ முகாம்: அமைச்சர் துவக்கி வைப்பு

இலவச மருத்துவ முகாம்: அமைச்சர் துவக்கி வைப்பு

வில்லியனுார்: ஊசுடு தொகுதி பத்துக்கண்ணு எம்.எல்.ஏ., அலுவலக வளாகத்தில் நடந்த இலவச மருத்துவ முகாமை அமைச்சர் சாய் சரவணன்குமார் துவக்கி வைத்தார்.முகாமில் ஆறுபடைவீடு மருத்துவக் கல்லுாரிமருத்துவமனை டாக்டர் குழுவினர் பங்கேற்று பொது மருத்துவம், அறுவை சிகிச்சை மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, மகப்பேறு, கண், எலும்பு, குழந்தை மருத்துவம், தோல் மற்றும் பல் மருத்துவம் உள்ளிட்டவைகளுக்கு பரிசோதனை செய்து, மருந்துகள் வழங்கினர்.முகாமில் பங்கேற்றவர்களுக்கு இலவச சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் பரிசோதனை செய்தனர். பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி