மேலும் செய்திகள்
வேதபாரதி சார்பில் 2ம் தேதி இலவச மருத்துவ முகாம்
28-Jul-2026
புதுச்சேரி: பாரத பண்பாட்டு அமைப்பான வேதபாரதி சார்பில் நடந்த இலவச இந்திய மருந்துவ முகாமை கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைத்தார். பாரத பண்பாட்டு அமைப்பான வேதபாரதி சார்பில், இலவச இந்திய மருத்துவ முகாம் நேற்று நடந்தது. இ.சி.ஆர்., சங்கர வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நடந்த முகாமை கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைத்தார். அமைச்சர் சிவக்கொழுந்து, காஞ்சி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சீனிவாசு, டீன் வெங்கட்ரமணன், சென்னை ஆடிட்டர் குமரகுரு, முன்னாள் எம்.எல்.ஏ., சிவசங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தனர்களாக கலந்து கொண்டனர். சென்னை பூந்தமல்லி ஜெயேந்திர சரஸ்வதி ஆயுர்வேத மருத்துவக் கல்லுாரி முதல்வர் சித்தரஞ்சன் தாஸ் தலைமையில், நாற்பதுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்தனர். காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை நடந்த முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். ஏற்பாடுகளை வேதபாரதி அமைப்பின் தலைவர் பட்டாபிராமன், பொதுச் செயலாளர் நடராஜன், பொருளாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.
28-Jul-2026