மேலும் செய்திகள்
சொகுசு கார் போச்சே அமைச்சர்கள், அதிகாரிகள் புலம்பல்
2 hour(s) ago
5 பேரிடம் ரூ. 90 ஆயிரம் மோசடி
2 hour(s) ago
திருக்கனுார், : செட்டிப்பட்டு கெங்கையம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நேற்று நடந்தது.திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் திரவுபதி அம்மன், செல்வ முத்துமாரியம்மன், கெங்கையம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், தீமிதி உற்சவத்தை முன்னிட்டு, நேற்று காலை 10:00 மணிக்கு கரகம் வீதியுலா, மதியம் 12:00 மணிக்கு கெங்கை அம்மனுக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.பின், திரவுபதியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மாலை 6:00 மணிக்கு மேல் தீமிதி உற்சவ கொடியேற்றம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து, வரும் 4ம் தேதி பகாசூரன் அன்னம் எடுத்தல், 7ம் தேதி முத்து மாரியம்மனுக்கு சாகை வார்த்தல் மற்றும் செடல் உற்சவம், 9ம் தேதி அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 11ம் தேதி காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி, மாலை 6:00 மணிக்கு தீமிதி உற்சவம் நடக்கிறது.
2 hour(s) ago
2 hour(s) ago