உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / எஸ்.எம்.வி., பள்ளியில் கோகுலாஷ்டமி விழா

எஸ்.எம்.வி., பள்ளியில் கோகுலாஷ்டமி விழா

புதுச்சேரி, : மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் எஸ்.எம்.வி., பள்ளியில் கோகுலாஷ்டமி விழா நடந்தது.விழாவில், தக்ஷஷீலா பல்கலைக்கழகத்தின் வேந்தரும், மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் தனசேகரன், பொருளாளர் ராஜராஜன், மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி முதல்வர் வெங்கடாஜலபதி ஆகியோர் கலந்து கொண்டனர். எஸ்.எம்.வி., பள்ளியின் முதல்வர் அனிதா வரவேற்றார். இதில், மாணவர்கள் கிருஷ்ணன், ராதை போல் வேடமணிந்து கிருஷ்ணர் சிலையின் முன் புல்லாங்குழல் இசைத்து மகிழ்ந்தனர். ராதை- கிருஷ்ணா நடனமும், கோலாட்ட நடனமும் ஆடினர். நிறைவாக, முறுக்கு, சீடை போன்ற பல வகையான பலகாரங்களை படையலுக்கு வைத்து கிருஷ்ணருக்கு தீபாராதனை நடந்தது. மாணவர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.ஏற்பாடுகளை பள்ளி முதல்வர், துணை முதல்வர், நிர்வாக அலுவலர், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ