அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு சம வாய்ப்பு கவர்னர் கைலாஷ்நாதன் விருப்பம்
வில்லியனுார் புதுச்சேரி அரசு சார்பில் கரிக்கலாம்பாக்கம் தனியார் திருமண நிலையத்தில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கினார். துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். சபாநாயகர் செல்வம், கலெக்டர் குலோ துங்கன் உட்பட பலர் பங்கேற்றனர்.சிறப்பு அழைப்பாளராக கவர்னர் கைலாஷ்நாதன் பங்கேற்று, பல துறைகளில் சாதனை படைத்த மகளிர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசியதாவது:நாட்டில் உள்ள பெண்கள் அனைவருக்கும் சம உரிமை, சமவாய்ப்பு, சமுதாய பாதுகாப்பு கிடைக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மனித சக்தியில், பாதி பெண்களாக இருக்கின்றனர். இதனால் தான் கடவுளை அர்த்தநாரிஸ்வரர், உமைபாகன் என்று சொல்கிறோம்.கோவில்களில் கட வுளை அபிராமி உடனுறை, தாயார் உடனுறை என்று பெண் சக்தியை சேர்த்தே பார்க்கிறோம். பெண்களுடைய கல்வி, முன்னேற்றம், உரிமை, பாதுகாப்பு, அரசியல், சமுதாய அதிகாரம் ஆகியவற்றை உறுதி செய்ய அரசுகள் பல சட்ட, திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இருந்தும் பெண்கள் பல சவால்களை சந்தித்து தான் வருகின்றனர்.பெண்கள் கல்வி அறிவு பெற்று எல்லா துறை களிலும் உலக அளவில் சாதனை படைத்து வருகின்றனர். பெண்களுக்கு அனைத்து துறைகளிலும் சம வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.தற்போது புதுச்சேரி போலீஸ் துறையின் வீரமங்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்புக்கு ஒரு தற்காப்பு பயிற்சி திட்டமாகும். பாரதப் பிரதமர், பெண்கள் போலீஸ் துறையில் மட்டுமல்லது, சி.ஐ.எஸ்.எப்., பி.எஸ்.எப்., சி.ஆர்.பி.எப்., போன்ற துணை ராணுவப் படை, என்.டி.ஏ., கடலோரப் காவல்படையிலும் பெண்கள் பணியில் சேருவதற்கு அனுமதி கொடுத்துள்ளார்.சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை 2023ல் மத்திய அரசு கொண்டு வந்தது. உரிமை, அதிகாரம், பாதுகாப்பு பெற்று இருக்க வேண்டும். இந்த நிலை உருவாக நாம் அனைவரும் ஒன்று இணைந்து செயல்படுவோம். இவ்வாறு கவனர் பேசினார்.