மேலும் செய்திகள்
பாகூர் ஒப்பந்ததாரர் பச்சையப்பன் இல்ல திருமண விழா
1 hour(s) ago
ஜிப்மர் ஓ.பி., பிரிவு நாளை இயங்காது
1 hour(s) ago
பெரியார் நகர் பகுதியில்நாளை குடிநீர் கட்
1 hour(s) ago
லாஸ்பேட்டை தொகுதி தி.மு.க., நுால் வெளியீட்டு விழா
1 hour(s) ago
புதுச்சேரி : கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில், குரு பூஜை விழா நேற்று நடந்தது.கருவடிக்குப்பம் இ.சி.ஆரில், பிரசித்தி பெற்ற குரு சித்தானந்த சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், சித்தானந்த சுவாமியின், 187வது ஆண்டு குரு பூஜை விழா, நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு கலச பிரதிஷ்டை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று காலை கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், ருத்ர ஜபம் நடந்தது. காலை 7:00 மணிக்கு மகா அபிேஷகம், பூரணாஹூதி நடந்தது. காலை 9:30 மணிக்கு, கலச புறப்பாடு, சுவாமிக்கு கலசாபிேஷகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்து தீபராதனை நடந்தது.கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. கணபதி, தட்சிணாமூர்த்தி சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். மாலை 6:00 மணிக்கு தீபாராதனை, இரவு 10:00 மணிக்கு அர்த்த ஜாம பூஜை நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago