மேலும் செய்திகள்
எஸ்.வி. பட்டேல் சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம்
04-Feb-2025
புதுச்சேரி: மூலக்குளத்தில் ஆக்கிரமிப்பு அகற்றிய அதிகாரியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த ஓட்டல் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி முழுதும் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றும் பணி கடந்த 4ம் தேதி முதல் நடந்து வருகிறது. நேற்று முன்தினம், மூலக்குளம் பகுதியில் உழவர்கரை நகராட்சி, பொதுப்பணித்துறை சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.மூலக்குளம் சந்திப்பில் இருந்து, முத்துப்பிள்ளைபாளையம் கோபாலன் கடை வரை, பெரம்பை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது.ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை அருகே, சாலையோர பொதுப்பணித்துறை வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டியிருந்த ஓட்டல் மேற்கூரையை அகற்றியபோது, ஓட்டல் உரிமையாளர் சம்பத், ஓட்டல் ஊழியர் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் தடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற யார் அதிகாரம் கொடுத்து என கேட்டு, ஆபாசமாக திட்டியதுடன், உழவர்கரை நகராட்சி இளநிலை பொறியாளர் சிவக்குமாரை கீழே தள்ளி, கொலை மிரட்டல் விடுத்தனர். ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவிட்ட கலெக்டர் குறித்தும் ஆபாசமாக திட்டினர்.வாக்குவாதம் அதிகரித்ததால், பொறியாளர் சிவக்குமாரின், சட்டையை பிடித்து தள்ளி, தாக்கினர். காயமடைந்த சிவக்குமார், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவரது புகாரின் பேரில், சம்பத், திருநாவுக்கரசு உள்ளிட்ட மூவர் மீதும் ரெட்டியார்பாளையம் போலீசார், வழக்குப் பதிந்து, திருநாவுக்கரசுவை கைது செய்தனர். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.
04-Feb-2025