காங்., அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டம்
புதுச்சேரி: புதுச்சேரி மகிளா காங்., நிர்வாகிகள் மாநில தலைவி நியமனத்தை கண்டித்து உண்ணாரவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.புதுச்சேரி மாநில மகிளா காங்., தலைவராக ரகமத்துன்னிஷா (எ) நிஷாவை காங்., தலைமை நியமனம் செய்தது. இந்நிலையில் மாநில காங்., தலைமைக்கு தெரியாமல் மகிளா காங்., தலைவரை நியமனம் செய்ததை கண்டித்து, வைசியால் வீதியில் உள்ள காங்,, தலைமை அலுவலகத்தில் மகிளா காங்., நிர்வாகிகள் சிலர் நேற்று உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினர். போராட்டம் இரவு 10:00 மணியை தண்டியும் நீடித்ததால், தகவலறிந்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, கட்சி அலுவலகத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், தங்களது கோரிக்கைகளை காங்., தலைமையிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையேற்று உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் கட்சி அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.