உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கணவர் 2வது திருமணம்; முதல் மனைவி புகார்

கணவர் 2வது திருமணம்; முதல் மனைவி புகார்

புதுச்சேரி : இரண்டாவது திருமணம் செய்த கணவர் மீது முதல் மனைவி போலீசில் புகார் அளித்தார்.உருளையன்பேட்டையை சேர்ந்தவர் பிரபாகரன், 36. அவரது மனைவி விமலா,31. இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்து, உடல் நிலையில் சரியில்லாமல் இறந்தது. உறவு முறையில் திருமணம் செய்ததால், குழந்தைக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது என பிரபாகரனின் பெற்றொர் விமலாவை தவறாக பேசி வந்தனர். பிரபாகரன் தனது மனைவியிடம் பேசாமல் வீட்டுக்கு வராமல் இருந்து வந்தார்.இந்நிலையில், பிரபாகரன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்தார். அதையடுத்து, 2வது திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புதுச்சேரி அனைத்து மகளிர் போலீசில் விமலா புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி