மேலும் செய்திகள்
மனைவி மாயம் : கணவர் புகார்
13-Jul-2026
அரியாங்குப்பம்: வேலைக்கு சென்ற கணவரை காணவில்லை என மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். தவளக்குப்பம் காந்தி நகர், 3வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சேதுராமன், 41. இவர், கடலுாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் வேலைக்கு சென்றவர் இரவு வரை வீடு திரும்பவில்லை. அவரது மொபைலும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. உறவினர்களின் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து, அவரது மனைவி கல்பனா கொடுத்த புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.
13-Jul-2026