உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் சிறுவன் கழுத்தை அறுத்து படுகொலை காரைக்காலில் கொடூரம்

விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் சிறுவன் கழுத்தை அறுத்து படுகொலை காரைக்காலில் கொடூரம்

காரைக்கால் : விளையாடும் போது ஏற்பட்ட தகராறில் மாணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் காரைக்காலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.காரைக்கால் அடுத்த திருப்பட்டினம் நிரவி புதியபாலம் அருகில் உள்ள ஒயிட் ஹவுஸ் காலனியை சேர்ந்தவர் சிங்காரவேல். கூலி தொழிலாளி. இவரது மகன் சந்தோஷ்,13; அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.கோடைவிடுமுறையில் வீட்டின் அருகே நண்பர்களுடன் விளையாடுவது வழக்கம். அவ்வாறு விளையாடும் போது 15 வயது சிறுவனுடன் தகராறு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று மாலை சந்தோஷ் திடீரென மாயமானார். அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. சந்தேகத்தின் பேரில் பிரச்னை செய்து வந்த சிறுவன் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீடு பூட்டியிருந்தது. ஜன்னலை திறந்து பார்த்தபோது, சந்தோஷ் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வௌ்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.தகவலறிந்த சீனியர் எஸ்.பி., மணீஷ், எஸ்.பி., சுப்ரமணியன் மற்றும் நிரவி போலீசார் விரைந்து சென்று, வீட்டின் கதவை உடைத்து சந்தோஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து நிரவி போலீசார் வழக்கு, சந்தோஷை கொலை செய்த 15 வயது சிறுவன் மற்றும் அவரது பெற்றோர்களை தேடிவருகின்றனர். பள்ளி மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை