மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
6 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
6 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
6 hour(s) ago
புதுச்சேரி, : புதுச்சேரியில் 11 தேர்வு மையங்களில் நடந்த நீட் தேர்வினை 5 ஆயிரம் மாணவர்கள் எழுதினர்.நாடு முழுதும் உள்ள மருத்துவ கல்லுாரிகளில் இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு நேற்று நடந்தது. மதியம் 2:00 முதல் மாலை 5:20 மணி வரை தேர்வு நடந்தது. மொத்தம் 24 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர்.புதுச்சேரியில் நான்கு பிராந்தியங்களில் உள்ள 11 தேர்வு மையங்களில் நடந்த நீட் தேர்வினை 5 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதினர்.புதுச்சேரி பிராந்தியத்தினை பொருத்தவரை, முத்தியால்பேட்டை வாசவி இண்டர்நேஷனல் பள்ளி, வில்லியனுார் ஆச்சாரியா சிக் ஷா மந்திர், பொறையூர் ஆதித்யா வித்யாஷ்ரமம், அய்யங்குட்டிப்பைாளயம் விவேகானந்தா பள்ளி, காலாப்பட்டு தி ஸ்டடி, தேங்காய் திட்டு ஆச்சாரியா பால சிக் ஷா மந்திர், ஊசுடு ஸ்ரீபாரத் வித்யாஷ்ரமம் உள்ளிட்ட மையங்களில் தேர்வு நடந்தது.மதியம் 2:00 மணிக்கு தேர்வு துவங்கினாலும், 11 மணி முதலேயே மாணவர்கள் வர துவங்கினர். அவர்கள் தீவிர சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையங்களுக்குள் காகிதம், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள், கைப்பை, பிரேஸ்லெட், மொபைல்போன், பெல்ட், நகைகள், உணவு பொருட்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. 1:30 மணிக்கு பிறகு வந்த மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பெற்றோர்கள் வாழ்த்து கூறி நம்பிக்கையுடன் அனுப்பி வைத்தனர். நீட் தேர்வினையொட்டி தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியங்களில் முதல் முறையாக தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, அந்தந்த பிராந்திய மாணவர்கள் அலைச்சல் இல்லாமல் தேர்வு எழுதி முடித்தனர்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago