உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஜெம் மருத்துவமனையில் கல்லீரல் சிகிச்சை மையம் திறப்பு

ஜெம் மருத்துவமனையில் கல்லீரல் சிகிச்சை மையம் திறப்பு

புதுச்சேரி : புதுச்சேரி ஜெம் மருத்துவமனையில் சிறப்பு கல்லீரல் சிகிச்சை மையத்தை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்.புதுச்சேரி, பாக்கமுடையான்பட்டு, கொக்குபார்க் அருகில் ஜெம் மருத்துவமனை இயங்கி வருகிறது. மருத்துவமனையில், தொடங்கப்பட்ட சிறப்பு கல்லீரல் சிகிச்சை மையத்தை நேற்று முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார். தொடர்ந்து, மருத்துவமனையில், இலவச கல்லீரல் சிகிச்சை விழிப்புணர்வு முகாம் நடந்தது.நிகழ்ச்சியில், ஜெம் மருத்துவமனைகளின் தலைவர் பழனிவேல், இயக்குனர் செந்தில்நாதன், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் மேக்னஸ், மருத்துவர்கள் சசிகுமார், சுகுமாறன் உட்பட பலர் பங்கேற்றனர்.ஜெம் மருத்துவமனைகளின் தலைவர் பழனிவேலு கூறுகையில், 'எங்கள் ஜெம் மருத்துவமனையில், கல்லீரல் பிரச்னைகளுக்கான இலவச ஆலோசனை மற்றும் நோயாளிகளுக்கு பைப்ரோஸ்கேன் சோதனை, கல்லீரல் செயல்பாடு, ஹெபடைடிஸ் பி மற்றும் சி வைரஸ், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், கொழுப்பு கல்லீரல் சோதனை, தடுப்பூசி போன்றவறைகள் குறைந்த செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன' என்றார்.இயக்குனர் செந்தில்நாதன் கூறுகையில், 'மருத்துவமனையில் நடந்த கல்லீரல் நோய்கள் குறித்து விழிப்புணர்வு முகாமில், நீரிழிவு நோய், உடல் பருபன், ஹைபடைடிஸ் பி மற்றும் சி வைரஸ், மஞ்சள் காமாலை கல்லீரல் புற்றுநோய், கொழுப்பு கல்லீரல் ஆகிய நோய்கள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை