மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
7 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
7 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
8 hour(s) ago
புதுச்சேரி, : லாஸ்பேட்டையில், யோகா பண்பு பயிற்சி முகாம் நேற்று துவங்கியது. புதுச்சேரி, இ.சி.ஆர்., லாஸ்பேட்டை, சங்கர வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில், சிவராம்ஜி யோகா மையம் மற்றும் சமர்ப்பணம் சேவை மையம் இணைந்து நடத்தும், யோகா பண்பு பயிற்சி முகாம், நேற்று துவங்கியது.நிகழ்ச்சியில், சிவராம்ஜி யோகா மைய தலைவர் பால்ராஜா வரவேற்றார். வியாசா எஜூகேஷன் டெக் உரிமையாளர் அஸ்வத்தாமன் தொகுப்புரை வழங்கினார். சிவராம் ஜி யோகா மைய பொதுச்செயலாளர் சிற்றரசு நோக்க உரை நிகழ்த்தினார்.சின்மயா மிஷனை சேர்ந்த, ஷரண்யா சைதன்யா, குத்து விளக்கேற்றி, ஆசியுரை வழங்கினார். உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், விக்னேஷ் ஏஜென்சி உரிமையாளர் கணேசன், அ.தி.மு.க., மாநில இணை செயலாளர் கணேசன் ஆகியோர் வாழத்துரை வழங்கினார்.சிவராம்ஜி யோகா மைய பொருளாளர் மனோகரன் நன்றி கூறினார்.இம்முகாமில், 8 வயது முதல் 15 வயது வரை உள்ள சிறுவர் - சிறுமியர்கள் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதில் யோகாசனம், பிராணயாமம் பயிற்சி, பாரம்பரிய மற்றும் மகிழ்ச்சியூட்டும் விளையாட்டுகள், புராண மற்றும் தேசபக்தி கதைகள், தேச தலைவர்கள் வாழ்க்கை வரலாறு, ஓவியம், பெயிண்டிங், கராத்தே, வில் வித்தை பயிற்சி, தற்காப்பு பயிற்சிகள், தேசபக்தி மற்றும் பக்தி பாடல்கள், வினாடி வினாபோட்டி ஆகிய பயிற்சி அளிக்கப்படுகிறது.பயிற்சி முகாம் வரும் 11ம் தேதி நிறைவடைகிறது.
7 hour(s) ago
7 hour(s) ago
8 hour(s) ago