மேலும் செய்திகள்
மாணவர்களுக்கு கையெழுத்து போட்டி
22-Aug-2024
புதுச்சேரி : சென்டாக்கில் முறைகேடாக விண்ணப்பித்த மாணவ-மாணவியர் பெயர்களை நீக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக, கவர்னர் மற்றும் முதல்வரிடம், புதுச்சேரி மாநில மாணவர் மற்றும் பெற்றோர் நலச்சங்க தலைவர் பாலசுப்ரமணியன் அளித்த மனு;புதுச்சேரி சென்டாக் வரும் 11ம் தேதியில் இருந்து, இரண்டாம் கட்ட மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான, நடைமுறைகளை தொடர வேண்டும். இறுதிக்கட்ட மருத்துவ மாணவர் தரவரிசை பட்டியலில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விண்ணப்பித்த, 4 மாணவ - மாணவியர் மீதும், கேரளா மாநிலத்திலும் மற்றும் புதுச்சேரி சென்டாக்கிலும் விண்ணப்பித்த, 9 மாணவ-மாணவியர் மீதும் சுகாதாரத்துறை இயக்குனரகத்தில் புகார் அளிக்கப்பட்டது.இதையடுத்து, அந்த 13 மாணவர்களின் ஆவணங்களை, சரி பார்க்க சென்டாக் நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டது. இதில், 9 பேர் சான்றிதழ்கள் சரி பார்க்கப்பட்டுள்ளன. மருத்துவ இயக்குனரகத்தால் சந்தேகம் ஏற்பட்ட, 4 பேர் இதுவரை உரிய விளக்கம் அளிக்க வரவில்லை. ஆகையால் சுகாதாரத்துறை, சுகாதாரத்துறை இயக்குனரகம், சென்டாக் நிர்வாகம் உடனே முறையற்ற விதிமீறல்கள் மற்றும் மரபுகளை தாண்டி, இரு மாநிலங்களில் விண்ணப்பித்த மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, புதுச்சேரி மாநில மாணவர்களின் மருத்துவ இடங்களை மீட்டெடுக்க வேண்டும். தற்போது சென்டாக்கில் முறைகேடாக விண்ணப்பித்த மாணவ-மாணவியர் பெயர்களை நீக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
22-Aug-2024