உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பஸ் நிலையத்தில் பைக்குகளை எடுத்து செல்ல அறிவுறுத்தல்

பஸ் நிலையத்தில் பைக்குகளை எடுத்து செல்ல அறிவுறுத்தல்

புதுச்சேரி, : பஸ் நிலையத்தில் கட்டுமான பணி நடந்து வருவதால், அங்கு நிறுத்தப்பட்டுள்ள பைக்குகளை வரும் 27ம் தேதிக்குள் எடுத்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.புதுச்சேரி புதிய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 31 கோடி ரூபாய் மதிப்பீல் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. அதனை அடுத்து, கடந்த 16ம் தேதி பஸ் நிலையம் தற்காலிகமாக, கடலுார் சாலை, ஏ.எப்.டி., மைதானத்தில் மாற்றப்பட்டுள்ளது.இந்நிலையில், பஸ் நிலையம் அருகில், நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம் குத்தகைக்கு விடப்பட்டு, அங்கு பைக்குகள் நிறுத்தப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் உள்ள கட்டடம் விரைவில் இடிக்கப்பட உள்ளது. இதனால், அங்கு நிறுத்தியுள்ள பைக்குகளை அவற்றின் உரிமையாளர்கள், வரும் 27ம் தேதிக்குள் டோக்கன்களை கொடுத்து விட்டு எடுத்து செல்ல வேண்டும் என, பல் நோக்கு சேவைகள் வழங்கும் சங்கத்தின் மேலாண் இயக்குனர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை