உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சர்வதேச காற்றாடி திருவிழா ஈடன் கடற்கரையில் அலைமோதிய கூட்டம்

சர்வதேச காற்றாடி திருவிழா ஈடன் கடற்கரையில் அலைமோதிய கூட்டம்

அரியாங்குப்பம்: ஈடன் கடற்கரையில் சர்வதேச பட்டம் பறக்க விடும் திருவிழாவில், விடுமுறையான நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்துவது, சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக, அரியாங்குப்பம் அடுத்து சின்ன வீராம்பட்டினம், ஈடன் கடற்கரையில், தனியார் நிறுவனம் சார்பில், சர்வதேச அளவிலான பட்டம் பறக்க விடும் திருவிழா, நேற்று முன்தினம் துவங்கியது.இந்த நிகழ்ச்சியில், தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட 8 நாடுகளை சேர்ந்த பட்டம் தொடர்பான வல்லுநர்கள் பற்கேற்று பட்டத்தை பறக்க விட்டனர்.இதில் மீன், ஆமை, ஆக்டோபஸ், திமிங்கலம், சுறா உள்ளிட்ட பல்வேறு கடல் வாழ் உயிரினங்கள் வானத்தில் பறப்பது போல, ராட்சத பலுான்கள் வடிவமைக்கப்பட்டு, காட்சிப்படுத்தப்பட்டன.இரண்டாம் நாள் நிகழ்ச்சியான நேற்று, காற்றாடி திருவிழாவை கான சுற்றுலா பயணிகள், குழந்தைகள் என பலர் கடற்கரையில் குவிந்தனர். அவர்கள் கடற்கரை பகுதியில் வானத்தில் பலுான், மூலம் உருவாக்கப்பட்ட மீன் உள்ளிட்ட வடிவிலான பறந்த பட்டங்களை கண்டு ரசித்தனர். காற்றாடி திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை