உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புவனேஸ்வரி அம்பாள் விக்ரகத்தை பூஜித்து திருப்பணியில் பங்கேற்க அழைப்பு

புவனேஸ்வரி அம்பாள் விக்ரகத்தை பூஜித்து திருப்பணியில் பங்கேற்க அழைப்பு

புதுச்சேரி : புதுச்சேரியில் புவனேஸ்வரி அம்பாளை வீட்டிற்கு அழைத்து, பொதுமக்கள் பூஜை செய்து, கோவில் திருப்பணியல் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் உள்ள புவனேஸ்வரி தேவி கோவிலில் திருப்பணிகள் நடந்து வருகின்றன. இந்த திருப்பணியில், அனைவருடைய பங்கும் இருக்க வேண்டும் எனும் நோக்கில், புவனேஸ்வரி தேவி மற்றும் சாந்தாநந்த மகா சுவாமிகளின் உற்சவ விக்ரகங்கள் வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் விஜயம் செய்ய திட்டமிடப்பட்டது.கடந்த சில மாதங்களாக, தமிழகத்தில் உள்ள பல்வேறு முக்கிய நகரங்களில், அம்பாள் மற்றும் சுவாமிகளின் விஜய யாத்திரை நடந்தது. கடந்த 1ம் தேதி முதல் அம்பாள் மற்றும் சுவாமிகளின் உற்சவ விக்ரகங்களின் யாத்திரை, புதுச்சேரியில் நடந்து வருகிறது.கோரிமேடு பகுதியில் உள்ள அப்பா பைத்தியம் சுவாமி கோவிலுக்கு, புவனேஸ்வரி அம்பாள் மற்றும் சாந்தாநந்த மகா சுவாமிகளின் உற்சவ விக்ரகங்கள் நேற்று காலை கொண்டு வரப்பட்டது. அங்கு முதல்வர் ரங்கசாமி, பூஜை செய்தார். புதுச்சேரியில் வரும், 10ம், தேதி வரை, பொதுமக்களின் வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு அம்பாள் மற்றும் சுவாமிகள் விஜயம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த வாய்ப்பை பயன்படுத்தி, வீடுகளில் அம்பாளை வரவழைத்து, தங்கள் கரங்களால் பூஜை செய்து, பொதுமக்கள் கோவில் திருப்பணியில் பங்கு பெறலாம். பூஜை செய்ய விரும்புவோர், 63814 19776 மற்றும் 88387 05310 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ